English | 中文 | Bahasa Melayu
CareNights (‘கேர் நைட்ஸ்’) ஆறு முதல் பதிநான்கு வயது சிறுவர்களுக்கான மாலை நேர சிறுவர் பராமரிப்பு ஆகும். வார நாட்களில் மாலை ஆறு முதல் பத்து மணி வரை செயல்படும். இந்த அமைப்பு சிறுவர்களின் சமூக திறன் மற்றும் உளவியல் (மனநிலை சம்மந்தமான) வளர்ச்சியை மேம்படுத்த உதவும். ஆரோக்கியமான இரவு நேர உணவு வழங்கப்படும்.
CareNights 2016 ஆம் ஆண்டு வீட்டில் ஆதரவு குறைந்த பிள்ளைகளுக்கு, ஆரம்பத் தலையீடு அளிக்க தொடங்கப்பட்டது.
நமது பயிற்சியாளர்களும் தொண்டர்களும் பண்புகள் மற்றும் செயல் திறன் சார்ந்த பாடத்திட்டத்தின்வழி, பிள்ளைகளின் சமூக மற்றும் உணர்வுகள் சம்மந்தமான வளர்ச்சிக்கு உதவுகிறார்கள். பாதுகாப்பான சூழலில் அமைப்பு, ஆதரவு மற்றும் சமூக இடைவினை மூலம் பிள்ளைகள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தவும், திறமைகளை கண்டறியவும் உதவி பெறுவர். நல்ல வாழ்க்கை திறன்களை வளர்பதன்மூலம் பிள்ளைகள் தனிதுவ வளர்ச்சி அடைவதோடு சமூகத்திற்கு நல்ல பங்களிப்பவர்களாக திகழ்கிறார்கள்.
CareNights பெற்றோர்களுடன் செயல்பட்டு, அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை புரிந்து தேவையான ஆதரவு அளிக்கிறது. மாதந்தோறும் நடைப்பெறும் பெற்றோர்-பிள்ளை பிணைப்பு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கான பட்டறைகள் மற்றும் மதித்துணை (counselling) மூலம் உதவி பெறலாம்.
நேரம் மாறும் வேலை செய்யும் பெற்றோர் அல்லது காப்பாளர்கள், கல்வி மற்றும் திறம் மேம்படுத்தும் பெற்றோர், சவால்மிக்க குடும்ப சுழலில் உள்ள குடும்பங்கள் CareNights தற்காலிக பராமரிப்பின்மூலம் பயனடையலாம்.
$4,500 குடும்ப வருமானம் (தலா வருமானம் $1,125) உட்பட்டவர்களுக்கு இச்சேவை வழங்கப்படுகிறது. ஆர்வமான பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் பின்வரும் விண்ணப்பப் படிவம்மூலம் பதிவு செய்யலாம்.